மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடர்கிறது, மேலும் 10பேர் உயிரிழப்பு



Dec 31, 2016

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

siragu-farmer

பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் மரணமடைந்து வருகிறார்கள். காவிரி-டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி, பிற மாவட்ட விவசாயிகளும் உயிரிழக்கின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(30.12.2016)ஒரே நாளில் 6 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இன்றும் அறந்தாங்கி, நாகை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் 10பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நிகழ்ந்து வரும் விவசாயிகள் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடர்கிறது, மேலும் 10பேர் உயிரிழப்பு”

அதிகம் படித்தது