மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

‘நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் சட்டமுன்வடிவு தாக்கல்



Jan 31, 2017

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

Siragu neet exam

எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களுக்கு மட்டும் சென்ற ஆண்டு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் அனைத்து மாநில மாணவர்களும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று இருந்தது.

இந்நிலையில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதன் மூலம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை பழைய முறைப்படி பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் முறையில் நடைபெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “‘நீட்’ நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் சட்டமுன்வடிவு தாக்கல்”

அதிகம் படித்தது