மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 2, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 26, 2022

siragu aingurunuru

வாழி ஆதன்! வாழி அவினி!
விளைக வயலே, வருக இரவலர்,
என வேட்டோளே யாயே, யாமே,
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழி வழிச் சிறக்க, என வேட்டேமே.

இந்தப் பாடல்கள் முழுவதும் வரும் ஆதனும் அவினியும் சேர மன்னர்கள். இந்தப் பாடல் வேட்கைப் பத்தில் வரும்.

தலைவன் தலைவியோடு பொது மகளிரையும் ஒன்றாகக் கருதுவதால் நீல மலர்கள் அதாவது நெய்தல் மலர்கள் போல இருக்கும் குவளை மலர்கள் போலத் தோன்றும் ஊரைச்சேர்ந்தவன் என்று பாடலில் வருகிறது.

கவிதை

மலையும் முகிலும் தழுவிக் கொள்ளும்

சேர நாட்டின் தலைவர்கள்

ஆதனும் அவினியும் வாழ்க

எனத் தோழி தலைவனிடம்

உரைத்து நிற்கிறாள்

 

என் தோழி

நீ பிரிந்த தனிமையை

மறந்து ஊரும் மக்களும்

செழிப்புற வேண்டினள்

அறம் வேண்டினள்

துன்பம் மறைத்து

நலம் வேண்டினள்

அவள் துவளுதல்

காண மனமது

கேளாது ஏங்கி நின்றோம்

 

கவின்

நெய்தல் மலர்களைக்

குவளை

எனக் குழப்பிக் கொள்ளும்

ஊரைச் சேர்ந்த நீ

தலைவியின் நெஞ்சைப்

புண்படுத்திச் சென்றனய்

என்றாலும்

தலைவியின் அன்பிற்காய்

நீ தலைவியோடு கொண்டிருந்த

நட்பு வாழ்க என

வாழ்த்தி நின்றோம்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 2, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது”

அதிகம் படித்தது