மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்.தொடர்ச்சி……(பாகம் 2)

ராஜ் குணநாயகம்

Jul 11, 2020

“த.தே.கூ இன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு (political solution) தொடர்பான பேச்சுவார்த்தைகள், அரசியல் முஸ்தீபுகள் பற்றியும், அதேவேளை 60 வருடங்களுக்கும் அதிகமான அரசியல் அனுபவத்தைக் கொண்ட த.தே.கூ இன் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்களின் அரசியல் சாணக்கியம் பற்றியும் பலத்த விமர்சனங்களையும் பலரும் முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.” என கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன், இவ்விடயம் சம்பந்தமாக இப்பத்தியில் ஆராய முற்படுவோம்.

திருவாளர் சம்பந்தன் அவர்கள் மிக அண்மையில் “சக்தி” தொலைக்காட்சியினால் நடத்தப்பட்டு வருகின்ற “மின்னல்” நிகழ்ச்சியில் பங்கு பற்றி அதில் நிகழ்ச்சித் தொகுப்பாளரினால் அரிசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்றி கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலே,
siragu tamil national alliance2
“வேறு வழியில்லை…… சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு, அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் ஊடாகவே அரசியல் தீர்வொன்றை தமிழர்களால் பெற்றுக்கொள்ள முடியுமெனவும்” குறிப்பிட்டிருந்தார். இக்கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன்.

சரி, த.தே.கூ இனரின் அரசியல் தீர்வு (political solution) தொடர்பான பேச்சுவார்த்தைகள், அரசியல் முஸ்தீபுகள் பற்றி விமர்சிக்கின்ற மாற்று தமிழ் கட்சிகளிடம் மக்கள் கேட்கும் கேள்வி “நீங்கள் எவ்வாறு, எவ்வகையான அரசியல் தீர்வை பெற்றுத்தரப்போகின்றீர்கள்? அவை இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலமைகளின் அடிப்படையில் சாத்தியமானதா, அடையப்பட கூடியதா, யதார்த்தப் பூர்வமானதா? இவைகள் பற்றி மக்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும்  தெரிவிப்பீர்களா?

siragu sambandhan1
அதேவேளை, த.தே.கூ இனரிடம் மக்கள் கேட்கும் கேள்வி யாதெனில்“ நீங்கள் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களோடு இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதும், இறுதியில் எவ்வித முடிவுகளுமின்றியே முறிந்து போவதும் தொடர்கதையாகவுள்ளது எனவே நீங்கள் புதிய அரசியல் அணுகுமுறைகள், உபாயங்கள் ஏதாவது வைத்திருக்கின்றீர்களா? அவ்வாறெனில், எவ்வாறு செயல்வடிவம் கொடுக்கப்போகின்றீர்கள்? இந்நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிப்பீர்களா?

சரி, பெரும்பான்மையின் தலைவர்களோ அல்லது கடும்போக்குவாதிகளோ த.தே.கூ இனரை அல்லது தமிழ் தலைமைகளை செங்கம்பளம் விரித்து வரவேற்று தங்கத்தட்டில் தமிழர்களுக்கான தீர்வினை வைத்து தருவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்களா என்ன?

இல்லை, இந்தியா, அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாடாவது அல்லது ஐ.நா சபையோ, ஐரோப்பிய ஒன்றியமோ தமிழர்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் இதய சுத்தியோடு இராஜதந்திர (diplomatic) செயற்பாடுகளை அக்கறையோடும் தொடர்ச்சியாகவும் (diligence, continuous) முன்னெடுத்து வருகின்றதா என்ன?

ஈழன்


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்.தொடர்ச்சி……(பாகம் 2)”

அதிகம் படித்தது