மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பேரறிஞர் அண்ணா உரைகள் ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 25, 2021

siragu arignar annaa
பேரறிஞர் அண்ணா அவர்களின்சொல்வீச்சைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். [பல்வேறு மேடைகளில், சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் அவர் ஆற்றிய உரைகளிலிருந்து சிறுதுளிகளை இங்கே பார்க்கலாம்.

1965 ஆம் நாள் டெல்லி மாநிலங்கள் அவையில் அண்ணா ஆற்றிய உரை இது

இந்திபாடம் இனி இல்லை என்று நான் தீர்மானத்தைப் படித்த போது அதிலே எனக்குஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால் தான் உணர்ந்து கொள்ள முடியுமே தவிர அதற்காகக்கஷ்டப்படாதவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.

தமிழகத்தில் தமிழ்பயிற்று மொழியாகவும் பாட மொழியாக எல்லா கல்லூரிகளிலும் நிர்வாக மொழியாகவும்பல்வேறு துறைகளிலும் 5 ஆண்டுக் காலத்திற்குள் நடைமுறைக்கு வருவதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது!!

இன்றளவும் தமிழ்நாடு இருமொழிக்கொள்கையில் பயணிக்க அண்ணா அவர்கள் போட்ட விதையே காரணம்.

1937இல்முசிறி வட்டம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் அப்பொழுது 28 வயதே ஆன பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்று அந்த மாநாட்டில் முதல் பொழிவைஆற்றினார். சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி பற்றி அவர் கூறும் பொழுது
“பணபலம்இன்றி செல்வாக்கு இன்றி ஒரு இயக்கம் எதிரிகளின் கொட்டத்தை விஷமிகளின்ஆர்ப்பாட்டத்தையும் முதலாளிகளின் எதிர்ப்பையும் சமாளித்து பத்தே ஆண்டுகளில்சரித்திரத்திலும் சமுதாயத்திலும் மதிப்பான ஒரு இடம் பெற்றது என்றால் அதுநமது இயக்கமே என்பதில் யாருக்கும் சந்தேகம் வராது என நம்புகிறேன் என்றுஉரையாற்றினார்”

சுயமரியாதை இயக்கம் சாமானியர்களின் இயக்கம்என்பதையும் ஆனால் அது ஆதிக்கத்திற்கு எதிராகக் கட்டமைத்த போரையும் இந்தஉரையில் நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

1953இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் சட்டத்தைப் பற்றி விளக்குகிறார்.

சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு என்பதை நமக்கு எடுத்துக் கூறியவர் பேரறிஞர் அண்ணா என்பதை நாம் அறிவோம்.

அதே வகையில் நீதிமன்றத்தில் சட்டம் பற்றி பேரறிஞர் அண்ணா என்ன கூறினார் என்பதையும் பார்க்கலாம்.

மேதகுநீதிபதி அவர்களே சட்டம் மனித அறிவின் மிகப் பண்பட்ட நிலையின் வெளிப்பாடு, நீதியினை கோட்பாடாக வைத்து சமூகத்தினை அமைதியுடனும் கட்டுக்கோப்புடன்வைத்திருக்கக் கிடைத்த உயரிய வழிமுறை, உண்மையில் சட்டம் என்பதுஆள்வோருக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு புனிதமான ஒப்பந்தம்என்கிறார்.

நீதி அமைதி ஒழுங்கினை நிலை நிறுத்தவே சட்டம் எந்தகாலகட்டத்திலும் எந்த ஒரு அமைப்பும் இதனைப் புறக்கணித்துக் கட்டுப்படாமல்செயல்பட்டு மக்களின் அமைதியைக் குலைத்து சட்டத்தைக் கேலிக்குரிய தாக்கினால்பின் நீதிபதி அவர்களே மக்கள் தங்களது மக்களாட்சி உரிமையைப் பாதுகாக்கவேண்டி கிளர்ச்சி செய்வர் அப்பொழுது சட்டத்தைச் சுட்டிக்காட்டி மக்களின்எழுச்சியை அடக்க முற்படும் செயல் சாத்தான் வேதம் ஓதுகிறது எனும்புகழ்வாய்ந்த கூற்றினை நினைவூட்டுகிறதுஎன்று நீதிமன்றத்திலே முழங்கினார்.

1962-ல் நாடாளுமன்றத்தில் முதன்முதலாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றிய போது,

நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்
நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன்

இப்படிக் கூறுவதால் நான் வங்காளியர்க்கோ மராட்டியர்க்கோ குஜராத்தியர்க்கோ எதிரானவன் அல்ல

ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல மனிதன் எப்படி இருந்தாலும் மனிதன் தான்

நான்என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் போதுதிராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்கத் திட்டவட்டமான தெளிவானமற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகின்றேன்அதனால் எங்களுக்கு சுய நிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம் என்றுமுழங்கினார்.

தமிழ்நாடு என்று நம்முடைய மாநிலத்தை அழைக்க வேண்டும் என்று மக்களவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கிய போது

தமிழ்நாடு என்ற பெயர் தமிழ் இலக்கியங்களில் எந்தெந்த இலக்கியத்தில் வருகிறது என்று சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

பரிபாடல் பதிற்றுப்பத்து சிலப்பதிகாரம் மணிமேகலை என்பவை மிகவும் பெருமை பெற்ற இலக்கிய பெயர்கள்,

1000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்ற பழமையான இலக்கியங்கள்!!

பரிபாடலில் “தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டு அகமெல்லாம்”என்னும் தொடர் மூன்று பக்கமும்கடல் சூழ்ந்து விளங்கும் தமிழ்நாடு என்னும் பொருள் தருவது ஆகும்.

1800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றப்பட்ட பதிற்றுப்பத்தில் குறிப்பிட்டுள்ளஇமிழ்கடல் வேலித் தமிழகம் என்பது கடலை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு என்னும்பொருள் உடையது ஆகும்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட தமிழ் நன்னாடு என்பது நல்ல தமிழ் நாடு என்னும் பொருள் தருவது ஆகும்.

மணிமேகலையில்வரும் “சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்” சம்புத் தீவு என்றுசொல்லப்படும் பகுதியில் தமிழ்நாடு என்பதை விளக்குவதாகவும் என்றும் மேலும்கம்பர் சேக்கிழார் எனும் இரு பெரும் புலவர்கள் குறித்துக் காட்டியபாடல்களில் தமிழ்நாடு விளங்குவதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றுதமிழ்நாடு எனும் பெயர் தமிழின் பழமையான இலக்கியங்களில் விளங்குகிறது என்பதைஎடுத்துக்காட்டி மக்களவையில் உரையாற்றினார் பேரறிஞர் அண்ணா!!

இப்படிஏராளமான எடுத்துக்காட்டுகளை நாம் அண்ணாவின் உரைகளிலிருந்து தரமுடியும். அண்ணாவின் உரைகள் ஆக இருக்கட்டும் எழுத்துக்களாக இருக்கட்டும் அவை தமிழ் இனஉணர்வின் மீது கட்டப்பட்ட கோட்டைகள், அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுநம்முடைய கடமை.

ஆதாரம் தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் தொகுப்பு: கோ . வேள் நம்பி


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேரறிஞர் அண்ணா உரைகள் ஒரு பார்வை”

அதிகம் படித்தது