மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சர்ப்ப குறியீடும் வெண்கல பாம்பும்! (பகுதி – 20)

முனைவர். ந. அரவிந்த்

Aug 21, 2021

 

தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் சர்ப்ப குறியீடு கற்களில் பொறிக்கப்பட்டு கோயிலுக்கு வருபவர்களின் கண்களில் படுமாறு வைக்கப்பட்டிருக்கும். சர்ப்ப குறியீடு என்பது இரண்டு பாம்புகள் அல்லது ஒரு பாம்பு ஒரு தடியை பின்னிக்கொண்டிருப்பதுபோல் பொறிக்கப்பட்ட ஒரு உருவமாகும். இது போன்ற குறியீடுகள் பொதுவாக சிவன் கோயில்களில் அரச மரங்களின் அடியில்கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம்.

siragu-sarppa-kuriyeedu2இதை பார்த்தால், விச ஜந்துக்களான பாம்பு, தேள், நட்டுவாக்காலி போன்றவை கடித்தால்அந்த விசம் உடனே இறங்கிவிடும் என்ற ஐதீகம் மக்களிடையே உள்ளது. அது மட்டுமின்றி, நோய் தீர்க்கும் குறியீடாகவும் இந்த சர்ப்ப குறியீடு பார்க்கப்படுகிறது. இதனால்தான் முன்னோர்கள் கோயில்களில் இந்த குறியீட்டினை கற்களில் வடித்தனர்.

siragu sarppa kuriyeedu1

இவ்வகை குறியீடானது மற்ற நாடுகளிலும் உள்ளன. கிரேக்க பண்பாட்டில் ஹெர்மஸ் (Hermes)தெய்வத்தின் கையில் இருக்கும் கோலில் பின்னி பிணைந்த பாம்புகளைக் காணலாம்.

siragu-sarppa-kuriyeedu3ஹெர்மஸ் தெய்வத்தின் கையில் இருக்கும் பின்னி பிணைந்த பாம்பு

திருவிவிலியத்தின்படி, மோசே காலத்தில் மக்கள் எகிப்தில் இருந்து பாலைவனத்தின் வழியாக கானான் தேசம் வரும்போது, இறைவனுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர். அவர்கள், ‘இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது’ என்றனர். உடனே, இறைவன் மக்கள் மீது கோபம்கொண்டு விசத்தன்மை கொண்ட பாம்புகளை அவர்களிடையே அனுப்பினார், அவை கடிக்கவே அந்த மக்களில் பலர் இறந்தனர்.

அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, ‘நாங்கள் பாவம் செய்துள்ளோம்’. நாங்கள் இறைவனுக்கும் உமக்கும் எதிராகப் பேசினோம், அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும்” என்றனர். அவ்வாறே மோசே இறைவனிடம் மக்களுக்காக மன்றாடினார். அப்போது, இறைவன் மோசேயிடம், ‘மக்களை கடித்ததைப்போல் ஒரு பாம்பினைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்’ என்றார். அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார். பாம்பு கடித்த மனிதர்கள் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைத்தார்கள்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். பாம்பின் விசத்தில் இருந்துதான் பாம்பு கடித்தவர்களுக்கு போடும் விச முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. எப்படி இறைவன் படைத்த பறவையிலிருந்து விமானமும், திமிங்கலத்திலிருந்து நீர் மூழ்கி கப்பலும் மனிதன் உருவாக்கினானோ அதுபோல்பாம்பு கடித்த மக்கள் வெண்கல பாம்பினை கண்டால் உயிர் பிழைப்பார்கள் என்ற சம்பவம் விச முறிவு மருந்து தயாரிப்பதற்கு ஒரு முன்னாடி.

siragu-sarppa-kuriyeedu4மோசே செய்த வெண்கல பாம்பு

இவ்வகை சர்ப்ப குறியீடானது விசம் மற்றும் நோய் தீர்க்கும் குறியீடாக இருப்பதால் உலகம் முழுவதும் இதனை மருத்துவமனைகளிலும், மருந்து பொருட்களிலும் அடையாள சின்னமாக பயன்படுத்தப்படுகின்றனர்.

இது மட்டுமின்றி, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் சிவப்பு நிற கூட்டல் சிவப்பு நிற சின்னத்தை பயன்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. மருத்துவர்கள் செஞ்சிலுவை சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று சித்தரிப்பதற்காக இச்சின்னம் மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செஞ்சிலுவை சங்கம் என்பது ஆபத்தில் இருப்பவர்களின் உயிர் காக்கும் ஒரு அமைப்பாகும். போர், நோய், பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக இச்சங்கம் 1863ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளஜெனீவா என்ற இடத்தில் உருவாக்கப்பட்டது. மக்கள் உயிர் காக்க இறைமகன் இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி தன்னுயிரை மாய்த்தார் என்பதால் இந்த சிலுவை சின்னம் செஞ்சிலுவை சங்கத்திற்கு அடையாளமாக வைக்கப்பட்டது. இந்த சங்கத்தில் உள்ளவர்களும் சுய நலமின்றி சாதி மத பாகுபாடின்றி பிறருக்கு உதவ வேண்டுமென்பதே செஞ்சிலுவை சங்கத்திற்கு வைக்கப்பட்ட அடையாள சின்னத்தின் நோக்கமாகும்.

siragu-sarppa-kuriyeedu5மருத்துவதுறையில் உள்ள சர்ப்ப குறியீடும் கூட்டல் சின்னமும்

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சர்ப்ப குறியீடும் வெண்கல பாம்பும்! (பகுதி – 20)”

அதிகம் படித்தது